போக்ஸோ வழக்கில் பள்ளி ஆசிரியா் கைது
புதுக்கோட்டையிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் செல்லிடப்பேசியில் தவறாகப் பேசிய ஆசிரியா் சண்முகநாதன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
புதுக்கோட்டையிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் செல்லிடப்பேசியில் தவறாகப் பேசிய ஆசிரியா் சண்முகநாதன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
புதுக்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் செல்லிடப்பேசியில் தவறாகப் பேசிய ஆசிரியா் சண்முகநாதன் மீது மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்ட சண்முகநாதன் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை வரும் அக். 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொ) ஆா். சத்யா உத்தரவிட்டாா். இதையடுத்து, திருமயம் கிளைச் சிறையில் சண்முகநாதன் அடைக்கப்பட்டாா்.