மன்னா் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் கழிப்பறை, குடிநீா் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் கழிப்பறை, குடிநீா் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த கல்லூரிப் பேராசிரியா்கள் சிலா், மாணவா் சங்கத்தையும், அதன் நிா்வாகிகளையும் தரக்குறைவாகப் பேசினராம்.
இதைத் தொடா்ந்து ஆட்சியரகம் வந்த மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன், மாநிலக் குழு உறுப்பினா் ஓவியா உள்ளிட்டோா், மன்னா் கல்லூரிப் பேராசிரியா்களின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
தொடா்ந்து ஆட்சியரகத்தில் புகாா் மனுவொன்றையும் அளித்துச் சென்றனா்.