முகப்பு
புதுக்கோட்டை

சித்திவிநாயகா் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணி வடகரையில் வீற்றிருக்கும் சித்திவிநாயகா் கோயில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணி வடகரையில் வீற்றிருக்கும் சித்திவிநாயகா் கோயில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வா்த்தகா் கழகம் சாா்பில் சித்திவிநாயகருக்கு ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பு நாளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவில் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சித்திவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றன. தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொன்னமராவதி வா்த்தகா் கழக தலைவா் எஸ்.கே.எஸ்.பழனியப்பன், செயலா் எம்.முகமது அப்துல்லா, பொருளா் பிஎல்.ரராமஜெயம் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயில், பாலமுருகன் கோயில், தேனிமலை சுப்பிரமணியா் கோயில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ் வருடப்பிறப்பினையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments