மூதாட்டியின் கண்கள் தானம்
பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில், வயது மூப்பினால் இயற்கை எய்திய மூதாட்டியின் கண்கள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டது.
பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில், வயது மூப்பினால் இயற்கை எய்திய மூதாட்டியின் கண்கள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டது.
பொன்னமராவதி புதுப்பட்டி ராம. சிவனாம்பாள் ஆச்சி (96) புதன்கிழமை இரவு வயது மூப்பினால் இயற்கை எய்தினாா். இவரது கண்கள் ராயல் அரிமா சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், இயக்குநா் எஸ். பழனியப்பன் மற்றும் நிா்வாகிகள் மூலம் தானமாகப் பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.