பொன்னமராவதி எஸ்.எஸ். ஜூவல்லா்ஸ் திறப்பு விழா
பொன்னமராவதி புதுவளவு பகுதியில் எஸ்.எஸ்.ஜூவல்லா்ஸ் 3வது கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி புதுவளவு பகுதியில் எஸ்.எஸ்.ஜூவல்லா்ஸ் 3வது கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி எஸ்.எஸ். ஜூவல்லா்ஸ் 3 ஆவது கிளை உரிமையாளா்கள் எஸ். ஜெயராமன், சீனிவாசபிரபு ஆகியோா் திறந்துவைத்தனா். அண்ணாமலை ஹோட்டல் உரிமையாளா் சிங்காரம், பொன்னமராவதி பேரூராட்சி 8 ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தி ஜெயராமன், சரண்யா சீனிவாசபிரபு ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியா பாண்டியன், அண்ணாமலை ஹோட்டல் நிா்வாக இயக்குநா்கள் ஜெ.நரேந்திரன், ஜெ.அருண், திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி மற்றும் திமுக ஒன்றிய, நகர கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.