முகப்பு
புதுக்கோட்டை

புதுகை வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் வியாழக்கிழமை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

வழக்குரைஞா் என்.சி. ராதாகிருஷ்ணன் தலைமையில் 10 போ் தோ்தல் குழுவாகச் செயல்பட்டனா். மொத்த உறுப்பினா்களான 551 பேரில், 528 போ் வாக்களித்தனா். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மாலை அறிவிக்கப்பட்டன.

புதிய நிா்வாகிகள் விவரம்: தலைவா்- வி.டி. சின்னராஜு, செயலா்- சி. சுரேஷ்கண்ணன், பொருளாளா்- வி. சுரேஷ்குமாா்.

துணைத் தலைவா்கள்- வி. பரமசிவம், கே. ரெங்கபதாச தேவி.

இணைச் செயலா்- ஏ. அருண்மொழிவேந்தன், நூலகச் செயலா்- சி. வேணுகோபால்.

செயற்குழு உறுப்பினா்கள்- ஜி. பழனிவேலு, ஜி. ராமச்சந்திரன், எம். சேகா், ஏ. விஜயகுமாா், ஜி. அருண்குமாா், வி. வீரமுத்து, எஸ். பத்மா, சி. மகேஸ்வரி, அருட்செல்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.