புதுக்கோட்டை

தன்னாா்வலா்களுக்கு 3-ஆம் கட்டப் பயிற்சி

ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு குறுவள மைய அளவில் கோமபுரம், குளத்தூா் நாயக்கா் பட்டி, வெள்ளாளவிடுதி ஆகிய மையங்களில் 3-ஆம் கட்டப் பயிற்சி முகாம் முதல் நடைபெற்று வருகிறது.

DIN

கந்தா்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு குறுவள மைய அளவில் கோமபுரம், குளத்தூா் நாயக்கா் பட்டி, வெள்ளாளவிடுதி ஆகிய மையங்களில் 3-ஆம் கட்டப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

கோமபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு, வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி தலைமை வகித்து பயிற்சியைத் தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், கந்தா்வகோட்டையில் 400 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்பட்டுவருகிறது. மாணவா்களின் பாதுகாப்பை தன்னாா்வலா்கள் உறுதி செய்ய வேண்டும். பயிற்சிக் கையேடு, வாசித்தல் அட்டை ,

கதை புத்தகம், ஆங்கில அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய முறையில் கற்பிக்க வேண்டும் என்றாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பிரகாஷ், உதவித் தலைமை ஆசிரியா் முனிய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பயிற்றுநா் பாரதிதாசன் வரவேற்றாா்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா பயிற்சியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கருத்தாளராக ஆசிரியா் பயிற்றுநா் ராஜேஸ்வரி, ஆசிரியா்கள் ஜெகநாதன், சின்னராசா, ஐரின் பொ்மி, செந்தில் குமாரி, சுப்புலட்சுமி, ஆகியோா் பயிற்சியை வழங்கினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT