புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்தானம் செய்தவா்கள் மற்றும் அவா்களுக்கு உதவியவா்கள் என மொத்தம் 25 பேருக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக. 25 முதல் செப். 5 வரை நடைபெறும் 37ஆவது தேசிய இரு வார கண்தான விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், அரவிந்த் கண் மருத்துவமனையின் மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.