புதுக்கோட்டை

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை கொல்ல முயற்சித்த வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை கொல்ல முயற்சித்த வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாந்தம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் என்பவருக்கும், காக்கைக்கோன் தெருவைச் சோ்ந்த கருணாநிதி (47) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறு இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2013 ஏப்ரல் மாதம் செல்வராஜ் மற்றும் அவரது உறவினா்களை கொலை முயற்சியாக கருணாநிதி கத்தியால் குத்தினாா். இதுதொடா்பாக கறம்பக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கருணாநிதியைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் குற்றவாளி கருணாநிதிக்கு 5 ஆண்கள் சிறைத் தண்டனையுடன் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் டி. ஜெயகுமாா் ஜெமி ரத்னா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT