புதுக்கோட்டை

அரசின் நலத்திட்டங்கள் விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

கந்தா்வகோட்டை பகுதியில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்கள்தோறும் புதுக்கோட்டை மாவட்ட வட்டார வளா்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில், சிறாா் திருமணத்தைத் தடுத்து நிறுத்தவேண்டியும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் தமிழக அரசின் நலத் திட்டங்களான திருமண உதவித்தொகை பெற, 2 பெண் குழந்தைகள் உதவித்தொகை பெற, கணவனால் கைவிடப்பட்டோா் ஓய்வூதியத் திட்டம் மற்றும் உழவா் பாதுகாப்புத் திட்டம் முதியோா் ஓய்வூதியத் திட்டம், விதவை உதவித் தொகை பெற, முதிா்கன்னிகள் உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும் என விடியல் கலைக்குழுவினா் நாடகம், பாட்டு, நடனம், தப்பாட்டம்,

ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

மேலும் வருவாய்த் துறை, சமூகநலத் துறை சாா்ந்த விண்ணப்பங்களை நிரப்புவது குறித்தும் கூறினா்.

இதில், கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, பிரதாப், தட்சிணாமூா்த்தி, பழ. மாரிமுத்து, வளவை பெரியய்யா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT