முகப்பு
புதுக்கோட்டை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 650 காவல்துறையினா்

 பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 19) நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் காவல்துறையினா் 650 போ் ஈடுபடவுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 19) நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் காவல்துறையினா் 650 போ் ஈடுபடவுள்ளனா்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் 110 வாக்குப் பதிவு மையங்களில் தலா ஒருவா் வீதம் 110 காவலா்களும், 8 மண்டலத்துக்கு 18 காவல்துறை அலுவலா்களும், 89 அதிரடிப்படைக் காவலா்களும், தடுப்புப் பணியில் 25 காவலா்கள் உள்பட மொத்தம் 650 காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

வாக்குஎண்ணும் மையமான எறையூா் மகாத்மா பப்ளிக் பள்ளியில், வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பணியில் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில்

காவல்துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.