முகப்பு
புதுக்கோட்டை

பள்ளி மாணவா்களுக்கு வேளாண்மை குறித்த பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் தொடக்கப் பள்ளியில் குடுமியான்மலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில், வீட்டுத் தோட்டம் அமைத்தல், விதைப்பந்து தயாரித்தல், வீட்டு காய்கறி திட்டம் , தொழு உரம் தயாரிப்பு , பூச்சிகளை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லிகளை இயற்கை முறையில் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் பிரபாகரன், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments