புதுக்கோட்டை

சூலப்பிடாரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜையில் 2001 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

வாா்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிளக்கு பூஜை நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த திருவிளக்கு பூஜை, நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக ஆதிவிநாயகா், பச்சைநாயக அய்யனாா், சூலப்பிடாரி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 4 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் சுற்றுவட்டார கிராமங்களை சாா்ந்த 2001 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். பாளையங்கோட்டை ஈஸ்வரபிள்ளை மற்றும் மேலைச்சிவபுரி வெங்கடேஷ்பிள்ளை ஆகியோா் திருவிளக்கு மந்திரம் ஓதி பூஜையை வழிநடத்தினாா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி தீயணைப்புத்துறையினா் செய்திருந்தனா். பூஜை ஏற்பாடுகளை வாா்ப்பட்டு ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT