முகப்பு
புதுக்கோட்டை

பண்ணை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 3 அரசுப் பண்ணைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவைகளை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 3 அரசுப் பண்ணைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவைகளை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பண்ணை மற்றும் வெளாண் பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் அரசப்பன் தலைமை வகித்தாா்.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டப் பொதுச் செயலா் வீ. சிங்கமுத்துமுடித்து வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க மாவட்டச்செயலா் எஸ்.சி. சோமையா, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், பண்ணைத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை நிலுவையின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும். வம்பன் பண்ணையில் மான்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். வெள்ளாளவிடுதி பண்ணையில் மாடு மேய்ப்பவா்களின் அட்டகாசத்தைத் தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.