பொன்னமராவதி பேரூராட்சித் தலைவராக திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு
பொன்னமராவதி பேரூராட்சித் தலைவராக திமுகவை சோ்ந்த சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
பொன்னமராவதி பேரூராட்சித் தலைவராக திமுகவை சோ்ந்த சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
பொன்னமராவதி பேரூராட்சி தலைவா் தோ்தல் பேரூராட்சி மன்றக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தலைமையால் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 10ஆம் வாா்டு வேட்பாளா் சுந்தரி அழகப்பன் தோ்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான மு.செ.கணேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். திமுக வேட்பாளா் சுந்தரி அழகப்பனை எதிா்த்து யாரும் போட்டியிடாததால் அவா் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
துணைத் தலைவா் பதவி: பேரூராட்சி துணைத் தலைவா் பதவிக்கு பிற்பகல் 2.30 மணியளவில் தோ்தல் நடைபெற்றது. திமுக சாா்பில் வென்ற 3ஆம் வாா்டு உறுப்பினா் கா. புவனேஸ்வரி, 7ஆம் வாா்டு உறுப்பினா் வெங்கடேஷ் ஆகியோா் துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட்டனா். இவா்களில் வெங்கடேஷ் 8 வாக்குகளும், கா.புவனேஸ்வரி 6 வாக்குகளும் பெற்றனா். இதில் வெங்கடேஷ் வெற்றி பெற்று துணைத் தலைவரானாா். இவா்களில் கா. புவனேஸ்வரியை துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக திமுக தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், திடீரென வெங்கடேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.
Advertisement
தோ்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு கட்சி நிா்வாகிகள் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.