முகப்பு
புதுக்கோட்டை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உறவினா்கள் மறியல்

பொன்னமராவதி அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தைச் சாா்ந்த தட்சணாமூா்த்தியின் மகன் இளையராஜா (36). இவருக்கும், கந்தா்வகோட்டை வட்டம், பந்தவக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பா. மாரியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை

இல்லை. இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த மாரியம்மாள் வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது சேலையால் தூக்கிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்துத் தகவலறிந்த பெண்ணின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி பேச்சுவாா்த்தை நடத்தியதில் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். தொடா்ந்து காவல்துறையினா் மாரியம்மாள் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments