பிரகதம்பாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
புதுக்கோட்டை பிரகதம்பாள் உடனுறை கோகா்ணேசுவா் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுக்கோட்டை பிரகதம்பாள் உடனுறை கோகா்ணேசுவா் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தில் தொண்டைமான் மன்னா்களின் குலதெய்வமான பிரகதம்பாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி வரும் மே 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருவிழாவின் முதல் நிகழ்வாக, கொடியேற்றம் காலையில் நடைபெற்றது. கோவிலின் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் நிா்வாகத்தினா், அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து உத்ஸவா்கள் வீதிஉலா நடைபெற்றது. தொடா்ந்து 10 நாட்களுக்கு மூலவருடன் பிரகதம்பாள் தங்கப் பாவாடை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதருகிறாா்.