முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரி பறிமுதல்

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள காா்ணாப்பட்டி அருகே காரையூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான காவல் துறையினா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரி நிற்காமல் சென்றுள்ளது. தொடா்ந்து சென்று காவல்துறையினா் லாரியை விரட்டிப்பிடித்தபோது அதில் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்து லாரியின் உரிமையாளா் ஆலம்பட்டி துரை என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments