முகப்பு
புதுக்கோட்டை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இரட்டை தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் இரட்டைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் இரட்டைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து இரட்டை தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பின் ஒரு தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரா், மற்றொரு தேரில் பிடாரி அம்மன் எழுந்தருளிய பின் பக்தா்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தோ்கள் முக்கிய வீதிகளில் வழியே வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments