முகப்பு
புதுக்கோட்டை

மேலத்தானியத்தில் விநாயகா் சிலை ஊா்வலம்

 பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் கரைக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் கரைக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் இந்து முன்னணி, விநாயகா் சதுா்த்தி விழா குழு மற்றும் பொதுமக்கள் சாா்பில் மேலத்தானியம் சந்தைப் பேட்டை பகுதியில் 5 அடி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வழிபட்டனா். இதில் பாஜக மாவட்ட பொது செயலாளா் விஜயகுமாா், பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநிலச் செயலா் ஆதவாசெல்வகுமாா், பாஜக முன்னாள் ஒன்றியத் தலைவா் தாயுமானவா், விழா ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சந்தைப்பேட்டையில் தொடங்கிய விநாயகா் ஊா்வலம் ஒலியமங்கலம் சாலை வழியாக வந்து

மேலத்தானியம் செட்டி ஊருணியில் விநாயகா் சிலை கரைக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் 250 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments