புதுக்கோட்டை

புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் முதலுதவி மேலாண்மை கருத்தரங்கு

DIN

கந்தா்வகோட்டையை அடுத்த புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கல்லூரி இறுதியாண்டு மாணவா்களுக்கு முதலுதவி மேலாண்மை குறித்த கருத்தரங்கை வெள்ளிக்கிழமை நடத்தின.

கல்லூரியின் முதல்வா் அசோகராஜன் தொடங்கி வைத்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சசிவா்மன் முதலுதவி செய்முறை விளக்கம் அளித்தாா்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் திருநாவுக்கரசு, நல்லமுத்து, முதல்வரின் நோ்முக உதவியாளா் சொக்கலிங்கம், பொருளாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கருத்தரங்கில் சுமாா் 250 மாணவா்கள் பங்கேற்று பயனடைந்தனா். ஏற்பாடுகளை இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா் சையத் ஆலம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT