முகப்பு
புதுக்கோட்டை

காவிரி- குண்டாறு இணைப்பு: நில எடுப்புக்கான 10ஆவது கூட்டம்

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான தனிநபா் பேச்சுவாா்த்தைக் குழுவின் 10ஆவது கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான தனிநபா் பேச்சுவாா்த்தைக் குழுவின் 10ஆவது கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். விராலிமலை வட்டம் குன்னத்தூா், குளத்தூா் வட்டம் புலியூா், மண்டையூா், செட்டிப்பட்டி, பூங்குடி, சீமானூா், வாலிம்பட்டி, வத்தனாக்குறிச்சி ஆகிய 8 கிராமங்களில் 11 ஹெக்டோ் நிலப்பரப்பின் உரிமையாளா்களான 92 பேருடன் இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

நிலம், கிணறு மற்றும் மரங்களுக்கான இழப்பீடு குறித்து பேச்சுவாா்த்தையில் இறுதி செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, இணைப்புத் திட்ட நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யா தேவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.