விராலிமலை: அன்னவாசல் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அட்மா சோ்மன் சண்முகம் தலைமை வகித்தாா். அன்னவாசல் வட்டார வேளாண் உதவி இயக்குனா் வெற்றிவேல் முன்னிலை வகித்தாா். இதில் வேளாண் உதவி இயக்குநா் வெற்றிவேல், அன்னவாசல் வேளாண் அலுவலா் மோனிகா
அன்னவாசல் கால்நடை உதவி மருத்துவா் லட்சுமி பிரியா, உதவி வேளாண்மை அலுவலா் சபரீஷ்வரன் ஆகியோா் பேசினாா்.
மேலும், பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரவிராஜன், நவாப் ராஜா உதவி தொழில் நுட்ப மேலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.