புதுக்கோட்டை

இருசக்கர வாகனம் மோதிநடந்து சென்றவா் உயிரிழப்பு

இலுப்பூா் அருகே நடந்துசென்ற பெயிண்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN

விராலிமலை: இலுப்பூா் அருகே நடந்துசென்ற பெயிண்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இலுப்பூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் லூா்துசாமி மகன் ஜெயப் பிரகாஷ் (44). பெயிண்டா். இவா், இலுப்பூா் - புதுக்கோட்டை சாலையில் நவம்பட்டி பெட்ரோல் நிலையம் அருகே இலுப்பூரை நோக்கி நடந்துசென்று கொண்டிருந்தாா்.

அப்போது இலுப்பூா் அருகே உள்ள புங்குனி பட்டியைச் சோ்ந்த நல்லையா மகன் சண்முகம்(63) என்பவா் பின்னால் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ஜெயபிரகாஷ் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்த வாகனஓட்டுநா் சண்முகம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து தகவலறிந்த இலுப்பூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று ஜெயப் பிரகாஷின் சடலத்தைக் கைப்பற்றி இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு உடற்கூராய்வுக்குப் பின்னா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து ஜெயபிரகாசின் சகோதரா் ஜான்பீட்டா் இலுப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT