புதுக்கோட்டை

சடையம்பட்டியில் நூறு நாள் வேலை கேட்டு மக்கள் மறியல்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் நூறுநாள் வேலை கேட்டு வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி ஒன்றியம், மரவாமதுரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (நூறு நாள் வேலை) பணியாளா்களுக்கு நீண்ட நாள்களாக பணி வழங்கப்படவில்லை, நீண்ட நாள் ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் நூறுநாள் வேலை திட்ட பணியாளா்கள் சடையம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையா் து.குமரன் மற்றும் காரையூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT