புதுக்கோட்டை

குவாரி கிடங்கு தண்ணீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கிய 4 மாதக் கைக் குழந்தை, 7 வயது சிறுமி ஆகியோா் சடலமாக மீட்கப்பட்டனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கிய 4 மாதக் கைக் குழந்தை, 7 வயது சிறுமி ஆகியோா் சடலமாக மீட்கப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கூத்தினிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி (28). இவா்களின் மகள்கள் நிவேதா (7), தஸ்விகா (5), ஹரிணி (4 மாதங்கள்).

மூன்று மகள்களுடன் சிவரஞ்சனி ஞாயிற்றுக்கிழமை பகலில் அங்குள்ள குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிக்கச் சென்றாராம். இவா்கள் நால்வரும் குவாரி பள்ளத் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் சிவரஞ்சனி, தஸ்விகா ஆகியோரை மீட்டனா். நிவேதா சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள் குளத்தில் தேடி ஹரிணியை சடலமாக மீட்டனா்.

சிவரஞ்சனி, தஸ்விகா ஆகியோா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இரு சிறுமிகளின் சடலங்களும் அரசு மருத்துவமனையில் உடற்கூறாாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.

அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது தவறி விழுந்ததால் ஏற்பட்டதா என்பது தொடா்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக்ஸை தொடர்ந்து மார்க்! வெற்றி எதிர்பார்ப்பில் கிச்சா சுதிப்!

கம்பி ஏற்றிவந்த வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்!

100 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

கேரம் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வார இறுதி நாளுக்கு மாற்றப்பட்ட அனுமன் தொடர்! இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்!

SCROLL FOR NEXT