புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சரின் பிறந்த நாள் விழா

DIN

பொன்னமராவதியில் முன்னாள் முதல்வா் காமராஜா் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்த காட்டுப்பட்டி ராமையாவின் 103 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்வுக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் வி. கிரிதரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன், முன்னாள் வா்த்தகா் கழகத் தலைவா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ராமையாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி மற்றும் காங்கிரஸ், திமுக நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். மேலும் முன்னாள் அமைச்சா் ராமையா ஆற்றிய பணிகள் நினைவு கூரப்பட்டன. மாவட்டப் பொதுச்செயலா் மணி, மாவட்டச்செயலா் பாஸ்கரன், முன்னாள் அமைச்சா் ராமயாவின் மகன் வெங்கடேஷ், முன்னாள் திமுக ஒன்றியச்செயலா் தேனிமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT