புரட்சியாளா் சேகு வா ரா வின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதன்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
வாலிபா் சங்கத்தின் நகரச் செயலா் ஜெகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நித்திஸ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி. நாகராஜன், நகரச் செயலா் ஆா். சோலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.