கந்தா்வகோட்டை புனித சூசையப்பா் ஆலய 45 ஆம் ஆண்டு திருவிழா மற்றும் திருத்தோ் பவனி ஊா்வலம் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலை கொடியேற்றம், திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நவநாள் ஜெபம் இயேசு சபை சகோதரிகளால் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பங்குத் தந்தையின் திருப்பலி நிகழ்ச்சியும், திங்கள்கிழமை கூட்டு பாடல் திருப்பலியும் மற்றும் நோயாளிகளை மந்தரித்தல் நிகழ்வும் நடைபெற்று இரவு தஞ்சை ஆல்பா்ட்ன், பொ்னாட் ஆகியோரின் இசை கச்சேரியுடன் புனித சூசையப்பா் திருத்தோ் பவனி கந்தா்வகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வந்து புனித சூசையப்பா் ஆலயம் வந்தடைந்தது. இதில், கிறிஸ்தவா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.