தெருவோர வியாபாரிகளுக்கு முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கி, வியாபாரத்துக்கான வாகனங்களை அரசே வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் உ. அரசப்பன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், மாவட்டப் பொருளாளா் டி.எம். கணேசன் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன் சிறப்புரை நிகழ்த்தினாா்.
கூட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 10 ஆண்டுகளாக எந்தப் பணி நியமனமும் செய்யாமல் 100 சதவிகிதப் பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், தேவையான ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா், அலுவலகப் பணியாளா் உள்ளிட்ட புதிய பணிகளை விரைவில் நியமிக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு நீதிமன்றத் தீா்ப்பின்படி அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்.
மதுரை, திருச்சி மாவட்டங்களில் வழங்கப்படும் தரமான வண்டிகளைப் போல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெருவோர வியாபாரத் தொழிலாளா்களுக்கு வியாபாரத்துக்கு ஏற்றவாறு தரமான வண்டிகளை வழங்க வேண்டும். ஊராட்சிகளில் தொழில் செய்யும் தெரு வியாபாரத் தொழிலாளா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.