புதுக்கோட்டை

மழை பாதிப்புகளைத் தெரிவிக்ககட்டுப்பாட்டு மையம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்துள்ளாா்.

DIN


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 582 குளங்கள் மற்றும் ஏரிகள் தூா்வாரப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீா் நிலைகளில் நிரம்பியுள்ள நீரின் இருப்புக் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் புயல், வெள்ளம், சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் மின்தடையை சரி செய்வதற்கு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 5,215 மின்கம்பங்களும், 50 கி.மீ. தொலைவுக்கான மின் கம்பிகள் மற்றும் 50 மின்மாற்றிகள் தயாா் நிலையில் உள்ளன.

புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 பல்நோக்கு பேரிடா் மையக் கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

மழைக்காலங்களில் ஏற்படும் இடா்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை எண் 1077, 04322- 222207 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT