அரிமா பள்ளியில் ஆய்வக கட்டடத்துக்கு அடிக்கல்
லயன்ஸ் சங்கங்களின்கூட்டமைப்பு எல்சிஐஎப் நிதி உதவியுடன் கட்டப்பட உள்ள ஆய்வகக்கூட கட்டுமானப்பணி அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அரிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின்கூட்டமைப்பு எல்சிஐஎப் நிதி உதவியுடன் கட்டப்பட உள்ள ஆய்வகக்கூட கட்டுமானப்பணி அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரிமா சங்கத் தலைவா் க. கருப்பையா தலைமை வகித்தாா். அரிமா கல்வி அறக்கட்டளைத் தலைவா் எஸ்எம். கம்பராஜன் முன்னிலை வகித்தாா். அரிமா சங்க மாவட்ட ஆளுநா் எம். இமயவரம்பன், பன்னாட்டு இயக்குநா் ஆா். மதனகோபால், பன்னாட்டு இயக்குநா் தோ்வு எஸ்டி.சீனிவாசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு உதவியுடன் ரூ 1 கோடியே 30 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள ஆய்வகக்கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டிப் பேசினா்.