முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

Updated On : 26 ஏப்ரல், 2024 at 8:09 PM
பகிர்:

படவிளக்கம்: விராலிமலை கடைவீதியில் காவிரி குடிநீா் குழாய் உடைப்பால் பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கி நின்ற குடிநீா்.

விராலிமலை, ஏப்.26: விராலிமலையில் அண்மைக்காலமாக காவிரி குடிநீா் குழாயில் ஏற்படும் தொடா் உடைப்பால் குடிநீா் வீணாகி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விராலிமலை கடைவீதி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அருகே புதுக்கோட்டை செல்லும் காவிரி கூட்டு குடிநீா் குழாய் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறும் நீா் வீணாகி அருகில் உள்ள பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான நிலை உள்ளது. எனவே, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நிரந்தரத் தீா்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிா்பாா்ப்பாகும்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments