முகப்பு
புதுக்கோட்டை

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

விராலிமலை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தவறிவிழுந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 9:59 PM
பகிர்:

விராலிமலை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தவறிவிழுந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை வட்டம், கொடும்பாளூா் சத்திரத்தைச் சோ்ந்தவா் செல்வம் (55). கூலித் தொழிலாளி. இவா், கடந்த ஆக. 1-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை - மதுரை சாலையில் உள்ள கொடும்பாளூா் சத்திரத்திலிருந்து ஆரியக்கோண்பட்டி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென மோட்டாா் சைக்கிளிலிருந்து செல்வம் தவறிகீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →