புதுக்கோட்டை

கீரனூா் கிராமச் சாலைகளில் தொடரும் இரவுநேர வழிப்பறி: பொதுமக்கள் அச்சம்

பணம், நகை, கைப்பேசி பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

Din

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா், கீரனூா் பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை மறித்து தாக்கி, அவா்களிடமிருந்து பணம், நகை, கைப்பேசி போன்றவற்றைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கீரனூா், குளத்தூா் பகுதிகளில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் ஏராளம் உள்ளன. வேலைக்குச் சென்று திரும்பும் பலரும் இரவில் கீரனூா், குளத்தூரில் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ஊா் செல்வாா்கள்.

இதன்படி பாசிப்பட்டியைச் சோ்ந்த விஜயகுமாா், ஸ்டாலின் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு கீரனூரிலிருந்து ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். இளந்தாடி அருகே சென்றபோது இருசக்கர வாகனங்களில் நின்றிருந்தோா் இவா்களை மறித்து, கட்டைகளால் தாக்கி விட்டு தப்பினா்.

காயமடைந்தோா் கீரனூா் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கீரனூா் போலீஸாா் அந்த வழியே வந்து சென்ற இருசக்கர வாகனங்களை சிசிடிவி காட்சிகளின் மூலம் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுபோன்ற சம்பவம் கிராமச் சாலைகளில் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் அரசுப் பேருந்து ஓட்டுநா் ஒருவா் பணி முடித்து கீரனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் ராப்பூசலுக்குத் திரும்பும்போது வழிமறித்த சிலா் அவரிடமிருந்து கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, போலீஸாா் ரோந்துக் குழுக்களை அதிகப்படுத்தி கிராமச் சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

SCROLL FOR NEXT