முகப்பு
புதுக்கோட்டை

பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 6:33 PM
பகிர்:

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை, ஆக. 22: புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தாரா மருத்துவமனையின் நிறுவனா் டாக்டா் தனசேகரன் தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா்.

சுமாா் ஆயிரம் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

டாக்டா்கள் கிஷோா், சசிரேகா, ராஷ்மி ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழுவினா் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குநா் சுதா்சன், துணை முதல்வா் குமாரவேல், அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மகாத்மா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.