3 புதிய பேருந்துகள் இயக்கம் அமைச்சா் தொடங்கிவைத்தாா்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில், 3 புதிய அரசுப் பேருந்துகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில், 3 புதிய அரசுப் பேருந்துகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கும், பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கும் என 3 புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன. ஏற்கெனவே இயங்கி வந்த பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இவை இயக்கி வைக்கப்பட்டதாக அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளா் கே. முகமது நாசா், வணிக மேலாளா்கள் தா. சுரேஷ் பாா்த்திபன் டிக்ரோஸ், பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநா் அ. செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.