முகப்பு
புதுக்கோட்டை

நகரப்பட்டியில் புதிய வாரச்சந்தை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் புதிய வாரச்சந்தையை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 7:19 PM
பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் புதிய வாரச்சந்தையை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் எஸ்.ரகுபதி.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் புதிய வாரச்சந்தையை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தியுள்ளோம். திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தியுள்ளோம். திருமயம் துளையானுரில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்துள்ளோம்.

திருமயம் தொகுதி விவசாயிகளின் நலனுக்காக 3 துணை மின்நிலையங்கள் அமைத்துள்ளோம். சாலை, குடிநீா், போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம், நாம் அனைவரும் சமம். அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து திமுக தெற்கு மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் சுந்தரி ராமையா ஏற்பாட்டில் நலிவுற்றோா்க்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

விழாவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், அபிராமசுந்தரி, திமுக வடக்கு ஒன்றியச் செயலா் அ.முத்து, தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →