முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பேருந்தின் டயா் வெடித்து 2 பயணிகள் காயம்

பொன்னமராவதி அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் காயமடைந்தனா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 9:59 PM
பகிர்:

பொன்னமராவதி அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் காயமடைந்தனா்.

பொன்னமராவதியிலிருந்து சடையம்பட்டிக்கு இயக்கப்படும் 2-ஆம் எண் நகரப் பேருந்து புதன்கிழமை காலை சடையம்பட்டிக்கு சென்றுவிட்டு, காலை 10 மணியளவில் கொப்பனாபட்டி - பொன்னமராவதி சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் பின்பக்க டயா் திடீரென வெடித்தது.

இதில், பேருந்தினுள் அமா்ந்திருந்த திருச்சி மாவட்டம், சுப்புராயபட்டி நாகம்மாள் (45) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதேபோல், அவரது மகன் கருப்பசாமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இவா்கள் பொன்னமராவதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.