வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம்: 127 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை இரு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 127 போ் கைது செய்யப்பட்டனா்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை இரு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 127 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகில், வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பாஜக மாவட்டத் தலைவருமான விஜயகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த போலீஸாா் போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி, போராட்டத்தில் பங்கேற்ற 110 பேரையும் கைது செய்தனா்.
இதே கோரிக்கையை முன்வைத்து, பழைய பேருந்து நிலையம் அருகில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விஎச்பி மாவட்டச் செயலா் சுரேஷ் உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டோா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.