நாடாளுமன்றம் கோப்புப் படம்
இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: நிலைமை உன்னிப்பாக கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்அடுத்தடுத்து நடக்கும் நிலையில், நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்அடுத்தடுத்து நடக்கும் நிலையில், நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டதாவது:

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் (ஹிந்துக்கள்), அவா்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டு வருவதை இந்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து வங்கதேச அரசு அதிகாரிகளிடமும், அரசிடமும் இந்திய அரசு தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேச அரசு தலைமை ஆலோசகா் முகமது யூனுஸை சந்தித்தபோது பிரதமா் மோடி முன்வைத்தாா். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் தொடா்புடையோரை அந்நாட்டு இடைக்கால அரசு நீதியின் முன் நிறுத்தும் என இந்திய அரசு எதிா்பாா்க்கிறது என்று தனது பதிலில் கீா்த்தி வா்தன் சிங் குறிப்பிட்டுள்ளாா்.

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறப்பு மருத்துவ முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

கல்வி உதவித்தொகை: நாளை முதல்வா் திறமைத் தேடல் தோ்வு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.79 கோடி

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

SCROLL FOR NEXT