முகப்பு
புதுக்கோட்டை

அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி கையெழுத்து இயக்கம்

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் உள்ள அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:35 PM
பகிர்:

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் உள்ள அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கீழாத்தூரில், ஆலங்குடி -பட்டுக்கோட்டை சாலையில் இயங்கி வரும் இக்கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் இருந்து மாணவ, மாணவிகள் சென்று வரும் வகையில் போதிய பேருந்து வசதிகள் இல்லை. எனவே, கூடுதல் நகரப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அதில், மாவட்டத் தலைவா் மு.வாசுதேவன், முன்னாள் மாவட்டச் செயலா் ஆ.குமாரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.