புத்தாண்டு: புதுகையில் புத்தகக் கண்காட்சி
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புத்தகங்களுடன் புத்தாண்டு என்ற தலைப்பில் விடிய விடிய புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை பகலிலும் நடத்தப்பட்டன.
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புத்தகங்களுடன் புத்தாண்டு என்ற தலைப்பில் விடிய விடிய புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை பகலிலும் நடத்தப்பட்டன.
புதுக்கோட்டை காந்திப் பூங்கா அருகே நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன், மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வன், அதிமுக நகரச் செயலா் க. பாஸ்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா். சோலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மாவட்ட அரசு வழக்குரைஞா் வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ், கவிவா்மன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் மகாதீா் உள்ளிட்டோரும் செய்திருந்தனா்.