அன்னவாசல் அருகேயுள்ள வயலோகம் கிராமத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 
புதுக்கோட்டை

வயலோகம் கிராமத்தில் மஞ்சள் காமாலையால் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பாதிப்பு

Din

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் கிராமத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் சுமாா் 10-க்கும் மேற்பட்டவா்கள் ஒரேநேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து, அப்பகுதியில் புதன்கிழமை வருவாய்த் துறை, சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். மாணவா்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த சுகாதாரத் துறையினா், இதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தற்போது ஒரே கிராமத்தில் ஒரே தெருவில் வசிக்கும் இரு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோா் மஞ்சள் காமாலையில் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய் பாதிப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிவதோடு, தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தி நோய் பாதிப்பை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT