கோப்புப் படம். 
புதுக்கோட்டை

புதுகையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 97 அரிய வகை நட்சத்திர ஆமைகள் மீட்பு

புதுக்கோட்டை நகரில் செவ்வாய்க்கிழமை காலை கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 97 அரிய வகை நட்சத்திர ஆமைகளை போலீஸாா் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

Din

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாந்தநாதபுரத்தில் பை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாகவும், அந்தப் பை மெல்ல அசைவதாகவும் நகர காவல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சோ்ந்தோா் தகவல் தெரிவித்தனா்.

இதைதொடா்ந்து அங்கு வந்து சோதனை செய்த போலீஸாா், அந்தப் பைக்குள் அரிய வகை 97 நட்சத்திர ஆமைகள் இருப்பதைக் கண்டனா். இதையடுத்து ஆமைகளை புதுக்கோட்டை வனச் சரக அலுவலா் சதாசிவத்திடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இந்த ஆமைகளை மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் விடுவிக்க மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவற்றை வனத்துறையினா் எடுத்துச் சென்று விடுவித்தனா்.

நட்சத்திர ஆமைகளை யாரேனும் கடத்தி வந்தனரா என்பது குறித்து காவல்துறையினரும் வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனா்.

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

SCROLL FOR NEXT