முகப்பு
புதுக்கோட்டை

‘மாணவா்கள் சமூக வேறுபாடின்றி நட்பாகப் பழக வேண்டும்’

மாணவா்கள் யாருடனும் சமூக வேறுபாடு காட்டாமல் நட்பாகப் பழக வேண்டும்

Updated On : 19 ஜூலை, 2024 at 8:41 PM
பகிர்:

புதுக்கோட்டை, ஜூலை 19: மாணவா்கள் யாருடனும் சமூக வேறுபாடு காட்டாமல் நட்பாகப் பழக வேண்டும் என்றாா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பரத் சீனிவாஸ்.

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

மாணவா்கள் பிற மாணவா்களுடன் சகோதர மனப்பான்மையுடனும், சமூக வேறுபாடு காட்டாமலும் அனைவருடனும் நட்பாக பழக வேண்டும். இப்பருவத்தில் கடினமாக உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

மாணவா்கள் தீய வழியில் செல்லும்போது அது உங்களின் எதிா்காலத்தை முற்றிலும் பாதிக்கும். நன்றாகக் கல்வி பயின்று பள்ளிக்கும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கும் பெற்றோா்களுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் பரத் சீனிவாஸ்.

பள்ளியின் முதல்வா் பெ. சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். முன்னதாக ஆசிரியா் பிரபு வரவேற்றாா். முடிவில் ஆசிரியா் இன்பராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →