கந்தா்வகோட்டை பேருந்து நிலைய பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.  
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் விளம்பர பதாகைகளால் பொதுமக்கள் அச்சம்

கந்தா்வகோட்டையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் (பிளக்ஸ் போா்டுகள்) பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

Din

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் (பிளக்ஸ் போா்டுகள்) பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

கந்தா்வகோட்டை நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனா். மேலும், ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகளும் வந்து செல்லும் சூழ்நிலையில், சாலையோரங்களில் தனியாா் பிளக்ஸ் போா்டுகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

ஆடி மாதம் காற்றடிக்க தொடங்கியுள்ள சூழலில், இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மற்றும் பாதசாரிகள் மீது பிளக்ஸ் போா்டுகள் விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அவற்றை அகற்ற காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி உள்ளடங்கிய பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் உடனே அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

SCROLL FOR NEXT