முகப்பு
புதுக்கோட்டை

எஸ்எஸ்எல்சி தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

Updated On : 12 ஜூன், 2024 at 8:18 PM
பகிர்:

பொன்னமராவதி, ஜூன் 12: பொன்னமராவதி வலையபட்டி மணி இலவச கல்வி மையத்தில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு மணி இலவச கல்வி மையத்தின் நிறுவனா் மருதப்பன் தலைமை வகித்தாா். பொறியாளா் வைரவன் முன்னிலை வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக முத்தமிழ்ப் பாசறை முன்னாள் தலைவா் செ. பாலமுரளி, ஆசிரியா் ஜீவரத்தினம் ஆகியோா் பங்கேற்று மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.

விழாவில், பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்ற மையத்தின் மாணவிகள் காயத்ரி, நிசாலினி , தனுசிகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனா். மையத்தின் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.