முகப்பு
புதுக்கோட்டை

மண்டகப்படி பிரச்னை: ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் பெண்கள் தா்ணா

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்ட பெண்கள்
பகிர்:

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதில், மண்டகப்படி பிரச்னை தொடா்பாக ஒரு தரப்பைச் சோ்ந்த பெண்கள் ஆலங்குடி வட்டாட்சியரிடம் மனு அளிக்க வட்டாட்சியரகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சென்றுள்ளனா். அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் வட்டாட்சியா் வரவில்லையாம். அவா் வருகை குறித்து, அலுவலா்களும் சரிவர பதில் அளிக்கவில்லையாம். இதனால், மனு அளிக்கச் சென்ற பெண்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா்.