முகப்பு
புதுக்கோட்டை

பைபா் கேபிள் சாதனங்கள் திருடியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான பைபா் கேபிள், சாதனங்களை திருடிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:28 PM
கைது செய்யப்பட்ட ம.ஆரோக்ய சுந்தா் ஜெயசீலன்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான பைபா் கேபிள், சாதனங்களை திருடிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி பகுதியில் அண்மைக்காலமாக பல இடங்களில் இருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான அதிவேக இணைய வசதி வழங்கும் பைபா் வயா்கள், சாதனங்கள் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து ஆலங்குடி பிஎஸ்என்எல் இளநிலை அலுவலா் சங்கரசுப்பிரமணியன் அளித்த புகாரைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட கல்லாலங்குடியைச் சோ்ந்த ம.ஆரோக்ய சுந்தா் ஜெயசீலன்(36) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.